இத்தாலி இந்து சமய கூட்டமைப்பு மற்றும் சோக்ரெம் நோவாராவின் ஒப்பந்தம்

இத்தாலி இந்து சமய கூட்டமைப்பு மற்றும் சோக்ரெம் நோவாராவின் ஒப்பந்தம்

இத்தாலி இந்து சமய கூட்டமைப்பும் மற்றும் சோக்ரெம் நோவார இடையிலான ஒப்பந்தத்தின்படி பின் வரும் விடயங்கள் உள்ளடங்கும்.

 • தங்கள் உறவினர்களின் பூதவுடலுக்கு ஈமக்கிரியைகள், அஞ்சலி செலுத்த, குறைந்த பட்சம் 60 நிமிடங்கள் பிரத்தியேக அறை இலவசமாக பயன் படுத்தும் வாய்ப்பு.
 • ஈமக்கிரியைகள் இடம் பெறும் அறையோ/மண்டபத்தையோ தற்காலிக கிரியைக்காக பிரத்தியேகமாக அமைத்துக் கொள்ள முடியும். முழுமையான மத கிரியைகளை செய்து கொள்ள முடியும்(தீபம், சாம்பிராணி…).
 • இறுதிக் கிரியையின் போது கொள்ளிக்கட்டையுடன் பூதவுடலை சுற்றி வருவதற்கு வாய்ப்பளிக்கின்றது;
 • பூதவுடலுக்கு (சவப்பெட்டிக்கு) மெழுகுவர்த்தி மூலமோ, அல்லது ஒரு சிறிய மரத்துண்டு (கொள்ளிக்கட்டை) மூலமாகவோ கொள்ளி வைப்பதற்கு வாய்ப்பு.
 • பூதவுடலை உறவினர்கள் விரும்பும் திசை நோக்கி வைக்க முடியும்.
 • தகனம் செய்யும் தருணத்தில் (முன்னறிவிக்கப்பட்ட நாள்) விரும்பிய உறவினரின் கையால் தகன இயந்திரத்தை இயக்கி வைக்க முடியும்.

 

இத்தாலி இந்து சமய கூட்டமைப்பும் மற்றும் சோக்ரெம் நோவார இடையிலான ஒப்பந்தத்தின் நன்மைகள்.

 

சோக்ரெம் நோவார, இத்தாலி இந்து சமய கூட்டமைபப்பு அங்கத்தவர்களின் வருடாந்த சந்தா கட்டணம் 5.00 யூரோக்கள். மற்றும் சாதாரண நபருக்கு வருட சந்தா 20,00 யூரோக்கள் ஆகும்.

இதன்படி கட்டணத்தில்15,00 யூரோக்கள் குறைவாகத் தான் செலுத்துதல் வேண்டும்.

 • நகரத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான செலவில் இறுதிச் சடங்குகள் (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்)
 • தகனச் செலவுகளின் குறைக்கப்பட்ட விகிதங்கள் (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்)
 • புது டெல்லிக்கு சாம்பலை விமானம் மூலம் அனுப்புவதற்கான செலவு. (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்)
 • சாம்பலையோ உடல்களையோ தாயகத்திற்குத் அனுப்பி வைப்பதற்கான உதவிகள்.
 • சோக்ரெமுடன் இணைந்த இறுதிச் சடங்கு நிறுவனங்களின் ஊழியர்கள் இந்து சமய இறுதி சடங்குகளில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

 

இந்த நன்மைகளால் யார் பயனடைய முடியும்?

 • இந்த நன்மைகள் இத்தாலி இந்து சமய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து இந்து சமூக மக்களுக்கும் கிடைக்கும்
 • இத்தாலி இந்து சமய கூட்டமைபப்பு, சோக்ரெம் நோவாரா பிரிவில் உறுப்பினராக விரும்பும் நபர், ஒரு சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
 • சோக்ரெமுடன் பதிவு செய்வதன் மூலம், தகனம், சாம்பலை கரைத்தல் மற்றும் இறுதிச் சடங்கின் சடங்குத் தொடர்பான விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
 • நீங்கள் உயிருடன் இருக்கும்போது பதிவு செய்ய வேண்டும், முதலில் சோக்ரெம் இல் பதிவு செய்யாமல் ஒருவர் இறந்துவிட்டால், இறந்தவரின் உறவினர்கள் மேலே விவரிக்கப்பட்ட நன்மைகளைப் பெற முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட ஆல்டேர் நிறுவனங்களின் பட்டியல்

Regione Provincia Città
Emilia Romagna Modena Modena
Emilia Romagna Parma Parma
Emilia Romagna Reggio Emilia Reggio Emilia
Emilia Romagna Rimini Rimini
Emilia Romagna Piacenza Piacenza
Friuli Venezia Giulia Gorizia Gorizia
Friuli Venezia Giulia Udine Cervignano
Friuli Venezia Giulia Udine Gemona
Lazio Roma Civitavecchia
Lazio Viterbo Orte
Liguria Imperia Imperia
Liguria Imperia Sanremo
Liguria Savona Savona
Lombardia Como Como
Lombardia Brescia Brescia
Piemonte Alessandria Acqui Terme
Piemonte Alessandria Serravalle Scrivia
Piemonte Alessandria Valenza
Piemonte Biella Biella
Piemonte Cuneo Magliano Alpi
Piemonte Novara Trecate
Piemonte Torino Piscina
Piemonte VCO Domodossola
Sardegna Cagliari Cagliari
Sardegna Olbia Olbia
Sardegna Sassari Sassari
Toscana Grosseto Grosseto
Toscana Pistoia Pistoia

 

சோக்ரெம் நோவாரா இல் பதிவு செய்வது எப்படி

 • பதிவு செய்வதற்கு, பதிவுப் படிவத்தை நிரப்பவும், அடையாள ஆவணம் மற்றும் வரிக் குறியீட்டின் (Codice fiscale) நகலை வழங்கவும். மற்றும் 5 யூரோக் கட்டணத்தைச் செலுத்துதல் வேண்டும்.

( அஞ்சல் ஆர்டர் / வங்கி பரிமாற்றம் மூலமாகவும்).

 • ஆவணங்கள் மற்றும் பதிவுப் படிவங்களைச் சேகரிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட இந்து வழிபாட்டுத் தலங்களில் நேருக்கு நேர் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய சோக்ரெம் நிறுவனம் ஏற்பாடு செய்யும்.
 • எதிர்காலத்தில் SPID அல்லது பிற அங்கீகார முறைகள் மூலம் அனைத்தையும் ஆன்லைனில் செயல்படுத்த உருவாக்கும் எண்ணம் உள்ளது.

சோக்ரெம்   உறுப்பினர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட செலவுகள் ஆண்டு 2023

சோக்ரெம் நோவார உடன் பதிவுசெய்யப்பட்ட இறந்த நபரின் உறவினர்கள், சோக்ரெம் நோவார உடன் இணைந்த இறுதிச் சடங்கு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இறுதிச் சடங்கை செய்து கொள்ளலாம்.  அதன் சேவைகள் மற்றும் தொடர்புடைய செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் (கீழே உள்ள அட்டவணை மற்றும் எடுத்துக்காட்டுகள் 1 மற்றும் 2 ஐப் பார்க்கவும்). இல்லையெனில், குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு விரும்பிய எந்த நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு இறுதிச் சடங்கை செய்து கொள்ளலாம். (எடுத்துக்காட்டு 3 கீழே பார்க்கவும்).

மேலே உள்ள கட்டணங்கள் 50 கிலோமீட்டர் சுற்றளவு உட்பட குறிப்பு நகரத்துடன் தொடர்புடையவை. 50 கிலோமீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு, 300 யூரோக்கள் அறவிடப்படும். அதிக கிலோ மீற்றர் தூரத்திற்கு பேசி முடிவு எடுக்கப்படும்.

 

இறுதிச் சடங்கில் என்ன அடங்கும்?

 1. தகனம் செய்வதற்கு பொருத்தமான சவப்பெட்டி விநியோகம், இரண்டு மாதிரிகளுக்கு இடையே தேர்வு: சாதாரணம்/ வேலைப்பாடுகளுடன்
 2. அடையாளத் தகடு மற்றும் ஏதேனும் மதச் சின்னம்
 3. பெட்டிக்குள் விரித்திருக்கும் மெத்தையின் வர்ணத்தை தெரிவு செய்யலாம்.
 4. சவப்பெட்டியை மூடுதல், சீல் செய்தல்.
 5. அந்த பருவ காலத்தில் இருக்கும் பூக்களில் மலர் வலயம் வைத்தல்.
 6. 10 பெரிய அளவிலான பிரசுரங்கள் அல்லது இறந்தவரின் நினைவாக, அவர்களின் பட்டியலில் உள்ள ஏதாவது 30 பொருட்களை நினைவாக செய்து கொள்ளலாம்.
 7. பெரிய திரையிலான வடிவத்தில் அறிவிப்பு செய்யலாம்.
 8. நகராட்சி ஆவணங்களை தயாரித்து முடித்தல்.
 9. அலங்காரம் வழிபாட்டு இடம் / பிரியாவிடை அறை, கையெழுத்து மேசை மற்றும் திரை வசதிகள்.
 10. சடங்குகளுக்கு மரியாதை செலுத்துதல்.
 11. வாகனம் மூலம் போக்குவரத்து வசதி.
 12. அடையாளத் தகடு கொண்ட கலசம்
 13. சிதறல், பராமரிப்பு உதவி வழங்கல்.
 14. கருங்கல்லில் பெயர் எழுதுதல்.
 15. சாம்பல் சேகரிப்பு உதவி
 16. மேலே உள்ள கட்டணங்கள் 50 கிலோமீட்டர் சுற்றளவு உட்பட குறிப்பு நகரத்துடன் தொடர்புடையவை. 50 கிலோமீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு, 300 யூரோக்கள் அறவிடப்படும். அதிக கிலோ மீற்றர் தூரத்திற்கு பேசி முடிவு எடுக்கப்படும்.

இறுதிச் சடங்கு மற்றும் தகனச் செலவுகளின் சில எடுத்துக்காட்டுகள்

உதாரணம் 1

தொரினோ (Torino) மாகாணத்தில் ஒரு இந்து இறந்தால், குடும்பம் சோக்ரெம் இறுதிச் சடங்கு நிறுவனத்தை நாடுகின்றது.:

– இறுதிச் செலவு = €2,200 (செலவு நிலையானது மற்றும் வெளிப்படையானது)

– தகன செலவு = 438 € (சாதாரண செலவுடன் ஒப்பிடும்போது இது தள்ளுபடி செய்யப்படுகிறது)

மொத்தம்: €2638

இறந்தவர் இத்தாலியில் சாம்பலைச் சிதறச் செய்யத் தேர்ந்தெடுத்திருந்தால், வேறு செலவுகள் எதுவும் இல்லை.

அதற்குப் பதிலாக அவர் சாம்பலை இந்தியாவில் சிதறச் செய்ய முடிவெடுத்தால், திருப்பி அனுப்புவதற்கான செலவுக்கு கூடுதலாக 200 யூரோக்கள் அறவிடப்படும்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினர் சாம்பலை இந்தியாவுக்குக் கையில் எடுத்துச் சென்றால், இந்த 200 யூரோக்கள் சேமிக்கப்படலாம், ஏனெனில் சாம்பலைக் கொண்ட கலசம் சாதரண பொதியில்  எடுத்துச் செல்லலாம்.

 

உதாரணம் 2

அலெஸாண்ட்ரியா  ( Alessandria ) மாகாணத்திற்கு வெளியே ஒரு இந்து  இறந்துவிடுகிறார், ஆனால் குடும்பம் அலெஸாண்ட்ரியாவில் அமைந்துள்ள சோக்ரெம் இறுதிச் சடங்கு நிறுவனத்தை நாடுகின்றது:

– இறுதிச் சடங்கு செலவு 2,800 யூரோக்கள் (நிலையான மற்றும் வெளிப்படையான செலவு)

– ஏஜென்சியின் பொறுப்புப் பகுதியிலிருந்து (அலெஸாண்ட்ரியா மாகாணம்) 50 கிமீக்கும் அதிகமான தூரத்திற்கு 300 யூரோக்கள் சேர்க்கப்படும்.

– தகனம் செலவு 438 யூரோக்கள்

மொத்தம்: €3538

இறந்தவர் இத்தாலியில் சாம்பலைச் சிதறச் செய்யத் தேர்ந்தெடுத்திருந்தால், வேறு செலவுகள் எதுவும் இல்லை.

அதற்குப் பதிலாக அவர் சாம்பலை இந்தியாவில் சிதறச் செய்யத் தேர்ந்தெடுத்திருந்தால்,

இறந்தவரின் குடும்ப உறுப்பினர் சாம்பலை இந்தியாவுக்குக் கையில் எடுத்துச் சென்றால், இந்த 200 யூரோக்கள் சேமிக்கப்படலாம், ஏனெனில் சாம்பலைக் கொண்ட கலசம் சாதரண பொதியில்  எடுத்துச் செல்லலாம்.

 

உதாரணம் 3

பிரேசியா (Brescia) மாகாணத்தில் ஒரு இந்து இறந்துவிடுகிறார், குடும்பம் சோக்ரெமுடன் இணைக்கப்படாத இறுதிச் சடங்கு நிறுவனத்தைத் நாடுகின்றது.

– இறுதிச் செலவு: இறுதிச் சடங்கு நிறுவனத்துடன் செலவு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

– தகனச் செலவு கிட்டத்தட்ட 620 யூரோக்கள் (சோக்ரெமுடன் இணைந்த பிரேசியாவில் உள்ள தகனத்திற்கு)

மொத்தம்: ஏஜென்சியுடன் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்

இறந்தவர் உயிருடன் இருக்கும்போது பதிவு செய்யப்பட்டிருந்தால், அனைத்து அதிகாரத்துவ பகுதியையும் சோக்ரெம் மேற்கொள்வார்

சோக்ரெமுடன் இணைந்த சுடுகாட்டிலும் சடங்குகளை மேற்கொள்ளலாம் (பிரியாவிடை அறை அமைத்தல், தூப விளக்குகள், தகன அறை தீ விளக்குகள் போன்றவை)

சாம்பலை திருப்பி அனுப்புவதற்கான செலவு 200 யூரோக்கள்

சோக்ரெம் இறப்பு நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும், பிரதேச பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள்.

உதாரணமாக பிரேசியாவில்   இறுதிச் சடங்கு நடந்தால், நீங்கள் அருகிலுள்ள நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் (மோன்சா பிரையன்சா (Monza Brianza) இது ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தில் 50 கிமீக்கும் அதிகமான தூரத்திற்கான கட்டணத்தைச் சேர்க்கும்: €2,600 + €300.

 

இறுதிச் சடங்கு காப்புறுதியை வாங்குதல்

சோக்ரெம் நோவார உறுப்பினர்கள் காப்புறுதி இறுதிச் சடங்கை  விருப்பம் இருந்தால் தேர்வு செய்யலாம், ஆனால் இது கட்டாயமில்லை

காப்புறுதி திட்டத்தின் மூலம், இறுதிச் சடங்குகளை செய்ய ஆர்வமுள்ளவர்கள் வருடத்திற்கு 180 யூரோக்கள் செலுத்தலாம். மரணம் ஏற்பட்டால், இறுதிச் சடங்குகள், உடலைத் தாயகத்திற்கு   அனுப்புதல், தகனம் செய்தல் மற்றும் இத்தாலியில் சாம்பலை கரைத்தல், அல்லது சாம்பலைத் பிறந்த நாட்டுக்கு அனுப்புதல் தொடர்பான அனைத்துச் செலவுகளையும் ட்ரஸ்ட் இன் மீ( Trust in Me)  காப்புறுதி நிறுவனம் ஈடுசெய்யும்.

இத்திட்டத்தில் கைச்சாத்திடுவதற்கு, அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு முதல் ஆண்டு செலுத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குப் பிறகு செல்லுபடியாகும்.

ஒப்பந்தத்தில் சோக்ரெம்க்கான வருடாந்திர சந்தா கட்டணமும் அடங்கும்.

நீங்கள் 18-65 வயதுக்குள் நுழையும் வயதுடையவராக இருந்தால், இக்காப்புறுதித் திட்டத்தில் இனையலாம், நீங்கள்  உங்கள் வாழ்நாள் முழுவதும் அல்லது நீங்கள் விரும்பும் வரை வருடத்திற்கு 180 யூரோக்கள் செலுத்தலாம். ஒப்பந்தமும் ஒரு வருடம் மட்டுமே நீடிக்கும். .

65 வயதுக்கு மேற்பட் வயதினருக்கு நுழைவு விகிதம் வேறுபட்டது.

திட்டத்தின் கட்டங்கள்

 1. இத்தாலி இந்து சமய கூட்டமைப்பும், சோக்ரெம்மும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 2. முதல் கட்டமாக கீழ் கண்ட பிராந்தியங்களில் ஆரம்பிக்கும். பியமொந்தே, லோம்பார்டியா, ப்பிரியூலி, எமிலியா ரோமானியா, டோஸ்கானா , லாசியோ, லிகூரியா, சர்தேனியா.

3.இத்தாலி அனைத்து பிராந்தியங்களுக்கும் இச்சேவை நீடிக்கப்படும்.

தகவல் மற்றும் படிவங்களுக்கான தேவைகளுக்கு